

பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஷ்னைடர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர். 2006-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2001-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஷ்னைடர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களுக்கு நிர்வாக துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
தொலைத்தொடர்பு நிறுவனமான அல்காடெல் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கியவர்.
செயின்ட் கோபைன், ஷ்லம்பெர்கர் போன்ற நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.
பிரான்ஸில் உள்ள எமிலியோன் நிர்வாக கல்லூரியில் எம்பிஏ படிப்பை முடித்தவர்.