Last Updated : 09 Oct, 2016 11:50 AM

 

Published : 09 Oct 2016 11:50 AM
Last Updated : 09 Oct 2016 11:50 AM

3 கோடி டாலர் முதலீட்டு மோசடி: அரசியல் நன்கொடையாளர் கைது

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் நன்கொடையாளர் ஸ்ரீதர் பொட்ட ராசு, முதலீட்டு மோசடி குற்றத்துக் காக போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். விடால்ஸ்பிரிங் டெக்னாலஜீஸ் இன்கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை 1999-ம் ஆண்டு தொடங்கியவர். இந்நிறுவ னத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிறுவனம் சமீபத்தில் என்ஸ்லைம் இன்கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அபிமானியான இவர் அக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு அளித்த 3 கோடி டாலர் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிக நன்கொடை அளித்ததால் இவருக்கு அதிபர் ஒபாமா அருகே அமர்ந்திருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது குறித்து கட்சித்தொண்டர்களே தங்களது அதிருப்தியை இணையதளம் மூலம் வெளியிட்டனர். ஆனால் இவர் அளித்த நன்கொடை இவரது சொந்தப் பணம் அல்ல என்பதும், இவரது நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் போட்ட தொகை என்பதும் தெரிய வந்துள்ளது.

3 கோடி டாலரை 160 முதலீட் டாளர்களிடமிருந்து திரட்டியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

விடால் ஸ்பிரிங் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் தங்களது மருத்துவம் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக முதலீடு செய்யப்பட்ட தொகையை இவர் கட்சிக்கு அளித்துள்ளார்.

இவரது விடால்ஸ்பிரிங் நிறுவனம் 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட 60 லட்சம் டாலர் வரியை செலுத்தவில்லை என எப்பிஐ குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து முதலீட்டாளர்களிடம் பொட்டராசு தெரிவிக்கவேயில்லை. வரி ஏய்ப்பு செய்த குற்றத்துக்காக இவர் மீது சிவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மியூசிக் அகாடமியையும் விட்டு வைக்கவில்லை

அமெரிக்காவில் கைதான பொட்டராசு, சென்னையில் இயங்கும் மியூசிக் அகாடமியையும் விட்டுவைக்கவில்லை. தான் மிகப் பெரிய கலாரசிகன், இந்திய கலாசாரத்தை அமெரிக்காவில் பரப்புகிறேன் என்று நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு 2007-ம் ஆண்டில் பரத நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். தொடர்ந்து 7 ஆண்டுகளாக மியூசிக் அகாடமியுடன் இவருக்கு தொடர்பு இருந்தது. ஆனால் இவரது நடவடிக்கைகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் சரிவர இல்லாததால் இவரது ஆதரவிலான நிகழ்ச்சிகளை மியூசிக் அகாடமி ஊக்குவிக்கவில்லை என்றும் ஒரு கட்டத்தில் 2014-ம் ஆண்டு முற்றிலுமாக துண்டித்துவிட்டதாக மியூசிக் அகாடமி மூத்த உறுப்பினர் ராகவன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x