Published : 20 Aug 2022 05:26 AM
Last Updated : 20 Aug 2022 05:26 AM

நாட்டின் தங்கம் இறக்குமதி 6.4 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் தங்கம் இறக்குமதி 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தகஅமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாதங்களில் தங்கம் இறக்குமதி 1,290 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.03 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

இது முந்தைய 2021-22-ஆம்நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தங்கம் இறக்குமதியான 1,200 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும், ஜூலை மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 43.6 சதவீதம் என்ற அளவில் கணிசமாக சரிந்து 240 கோடி டாலராக மட்டுமே காணப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவு வெகுவாக அதிகரித்தது. இது, 2021 ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 1,063 கோடி டாலராக மட்டுமே காணப்பட்ட வர்த்தக பற்றாக்குறையை நடப்பாண்டில் 3,000 கோடி டாலராக மிகவும் அதிகரிக்க முக்கிய காரணமானது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் தங்கத்தின் பயன்பாட்டில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆபரண துறையின் தேவை அதிகரிப்பால் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x