

தனியார் வங்கியான யெஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 31.30 சதவீதம் உயர்ந்து ரூ.801.50 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.610.40 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.3,995 கோடியில் இருந்து ரூ.4,982 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அதேபோல வாராக்கடன் அள வும் உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.61 சதவீதத் தில் இருந்து 0.83 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.20 சதவீதத்தில் இருந்து 0.29 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையும் ரூ.103 கோடியில் இருந்து ரூ.161 கோடியாக அதிகரித்திருக்கிறது.
யெஸ் வங்கியின் தலைவர் ராணா கபூர் கூறும்போது, இந்த காலாண்டில் யெஸ் வங்கியின் காசா விகிதம் முதல்முறையாக 30 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது என குறிப்பிட்டார். நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.34 சதவீதம் உயர்ந்து 1,308 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.