

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் குறைந்து வருகிற நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலே இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு உச்சம் தொட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் ரூ.22,452 கோடி (2.8 பில்லியன் டாலர்) அந்நிய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து ரூ.1.07 லட்சம் கோடி அந்நிய முதலீடு வெளியேறியது.
இதில் ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.50,023 கோடி முதலீடு வெளியேறியது. ஜூலை மாதத்தில் நிலைமை மாறத் தொடங்கியது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை வாங்கத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்தில் அது உச்சம் தொட்டுள்ளது.