Published : 18 Aug 2022 10:15 PM
Last Updated : 18 Aug 2022 10:15 PM
நியூடெல்லி: இந்திய வாகன சந்தையில் மாருதி சுசுகி ஆல்டோ கே10 - 2022 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது புது மாடல் கார்களை மாருதி அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஆல்டோ கே10 - 2022 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மாருதி பிரியர்களிடையே மிகவும் பிரபலம். புதிய லுக் மற்றும் புத்தம் புது அம்சங்களுடன் அசத்துகிறது இந்த லேட்டஸ்ட் மாடல். 22 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாடல் அறிமுகம் செய்ததில் இருந்து இதுவரை சுமார் 43 லட்சம் யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
புதிய புறத்தோற்றம், கேபின் மற்றும் எஞ்சின் போன்றவை மாற்றம் கண்டுள்ளது. கிரில், முகப்பு விளக்கு, டெயில் லாம்ப், டியூயல் ஏர்பேக்ஸ், ஆடியோ கேட்டு மகிழ 4 ஸ்பீக்கர்கள், 1.0 லிட்டர் டியூயல் ஜெட் என்ஜின் இதில் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 24.90 கிலோமீட்டரும், 5 ஸ்பீடு மேனுவலில் 24.39 கிலோமீட்டரும் இந்த கார் மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.99 லட்சத்தில் இருந்து ரூ.5.83 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT