

மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹிலேமேன் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2009-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஃபைசர் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2003-ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை வெய்த் நிறுவனத்தின் பயாலஜிக்கல் டெக்னாலஜீஸ் பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
இந்திய தொழில்நுட்ப கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் பி.டெக் பட்டமும், டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றவர்.
மருந்துப் பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் துறையில் 20 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர்.