Published : 24 Oct 2016 10:34 AM
Last Updated : 24 Oct 2016 10:34 AM

தென்னிந்தியாவின் மிகப்பெரிய வர்ச்சுவல் பிராபர்டி கண்காட்சி

புதிய சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் தேவை அதிகமாகி யிருக்கும் சூழ்நிலையில், நம்பக மான சொத்துகளை அடையாளம் காண வேண்டிய தேவையும் அதிக மாகியிருக்கிறது.

இதில் முதல் முறையாக தி இந்து இணையம் வழியாக சொத்துக்களை வாங்கவும் விற்க வும் புதிய முயற்சியை தொடங்கு கிறது. ‘தி இந்து வர்ச்சுவல் பிராபர்டி ஃபேர் 2016', ரூஃப் அண்ட் ஃப்ளோருடன் இணைந்து, தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் இணைய கண்காட்சியை நடத்துகிறது. சொத்துக்களை வாங்குபவர்க ளும், விற்பவர்களும் இணையத் தின் மூலமாகவே உரையாட முடியும்.

24 வயதிலிருந்து 44 வயது வரை, கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் புது சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த இணைய கண்காட்சி மூலமாக, பயனாளிகள், ஹிராநந்தனி, சாத்வா, பிபிசிஎல், இந்தியாபுல்ஸ், பிரெஸ்டீஜ், நோவா, இமாமி ரியாலிடி, அட்ராய்ட் மற்றும் வாத்வா குழுமம் உள்ளிட்ட பிரபல கட்டுமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

வீட்டுக் கடன் உதவிக்கு எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் இந்த முயற்சியில் இணைந்துள்ளது.

‘தி இந்து வர்ச்சுவல் ப்ராபர்டி ஃபேர் 2016', பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ சைட்டாக செயல்படும்.

இதில் கண்காட்சியின் விளம்பரதாரர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள், வழக்கமான நிகழ் நேர தகவல்கள், நிபுணர் உதவி, சொத்து வாங்க வழிகாட்டி உள்ளிட்டவைக்கான இணைப்புகளும் தனித்தனியாக வழங்கப்படும்.

இவை, முக்கிய கட்டுமான நிறுவனங்களின் சொத்துக்களைப் பார்த்து, ஆலோசித்து, வாங்க உதவிகரமாய் இருக்கும். வழக்க மான ரியல் எஸ்டேட் கண்காட்சி அனுபவத்தைப் பயனாளிகள் இருந்த இடத்திலிருந்தே, வசதியாக இணையத்திலேயே பெற முடியும்.

இந்த 30 நாள் இணைய கண்காட்சியில் பங்குபெற > http://propertyfair.thehindu.com/ என்ற இணைப்பில் பதிவு செய்துகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x