

நடப்பு நிதி ஆண்டில் இரண்டாம் காலாண்டில் லஷ்மி விலாஸ் வங்கியின் (எல்விபி) நிகரலாபம் 45 சதவீதம் உயர்ந்து ரூ.65 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.45 கோடியாக நிகர லாபம் இருந்தது. இதர வருமானம் உயர்ந்ததன் காரணமாக நிகர லாபம் உயர்ந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 19 சதவீதம் உயர்ந்து ரூ.830 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.698 கோடியாக இருந்தது. இதர வருமானம் 107 சதவீதம் உயர்ந்து ரூ.132 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.64 கோடியாக இருந்தது.
எங்களுடைய செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடினமான சூழ்நிலையில் கூட சிறப்பாக வளர்ச்சி அடைந்திருக்கிறோம். காசா விகிதம் அதிகரித்துள்ளதால், நாங்கள் கடன் வாங்கும் தொகைக்கான வட்டி விகிதம் குறைந்திருக்கிறது என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி கூறினார்.