

மும்பை: நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டன. மும்பைப் பங்குச்சந்தையில் 515 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 59,332 ஆக உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையில் 124 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 17,659 ஆக உயர்ந்தது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்தன. ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு மதிப்பு 2.69% உயர்ந்தது. பஜாஜ் பைனான்ஸ் 2.37%, ஹெச்டிஎஃப்சி 2.36%, டெக் மஹிந்திரா 2.09%, டிசிஎஸ் 2.03% என்ற அளவில் பங்குகளின் மதிப்பு உயர்ந்தன.
அமெரிக்காவில் பணவீக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் அங்கு பங்குச் சந்தையில் ஏற்றம்காணப்பட்டது. அது ஆசிய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.