

ஹீரோ பியூச்சர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.
ஆட்டோமொபைல் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.
கிரீன் இன்பிரா நிறுவனத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றியவர். எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தில் கூடுதல் துணைத் தலைவராக இருந்தவர்.
சொந்த பயன்பாட்டுக்கான காற்றாலை மின்னுற்பத்தி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். தேசிய காற்றலை மின்னுற்பத்தி கூட்டமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.
உத்திகள் வகுப்பு, ஒப்பந்தம், கையகப்படுத்துவது, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட துறைகளில் வல்லுநர்.
பிர்லா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். டெல்லி பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.