Published : 08 Aug 2022 08:47 PM
Last Updated : 08 Aug 2022 08:47 PM

பாதுகாப்புத் துறையில் இதுவரை 136 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

கோப்புப்படம்

புதுடெல்லி: பாதுகாப்புத் துறையில் இதுவரை 136 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு,102 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி சந்தோஷ் குமார் கேட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதில்: பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாதுகாப்புத் திறன் கட்டமைப்புக்கான புதுமை கண்டுபிடிப்புகள் திட்டத்தை அரசு தொடங்கியது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தனி நபர் கண்டுபிடிப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை இதில் ஈடுபடுத்தும் வகையில் இது தொடங்கப்பட்டது.

இந்த கட்டமைப்பின் கீழ் இதுவரை பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட்அப் சவால்களின் 7 பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 136 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 102 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக 2021-2022 -ம் ஆண்டிலிருந்து 2025-26-ம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.4,98.78 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x