

தனியார் துறை வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 25.75 சதவீதம் உயர்ந்து ரூ.704 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.560 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,439 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.3,581 கோடி யாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.77 சதவீதத்தில் இருந்து 0.90 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.31 சதவீதத்தில் இருந்து 0.37 சதவீதமாக அதிகரித்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.214 கோடி யாக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 25.85 சதவீதம் உயர்ந்து ரூ.1,365.64 கோடியாக இருக்கிறது. நேற்று 0.02 சதவீதம் உயர்ந்து 1,221.05 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.