

2015-ம் ஆண்டு 5 மாதங்கள் தடையை எதிர்கொண்ட நெஸ்லேயின் மேகி நூடுல்ஸ் விற்பனை மீள் அறிமுகத்திற்குப் பிறகு தனது பழைய விற்பனை அளவை எட்டிவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவையூட்டிகளின் அளவுக்கு மீறிய இருப்பு காரணமாக கடந்த ஆண்டு 5 மாதங்களுக்கு தடையை எதிர்கொண்ட மேகி நூடுல்ஸ் மீண்டும் சந்தையில் தனக்கான விற்பனைப் பங்கை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து நெஸ்லே நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “மேகி நூடுல்ஸ் வர்த்தகம் நீடித்த தனது விற்பனை அளவினால் சந்தையில் தனது விற்பனை பங்கை ஈட்டியுள்ளது. இது ஊக்கமளிப்பதாக இருப்பதோடு, கிட்காட் மூலம் சாக்லேட்டுகள் விற்பனையும் நன்றாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இன்ஸ்டண்ட் நூடுல்ஸுக்கான இந்திய சந்தையில் தற்போது 57% பங்கை நெஸ்லே ஈட்டியுள்ளது. முன்னதாக 75% சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது நெஸ்லே.
இன்ஸ்டண்ட் நூடுல்ஸுக்கான இந்திய சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது, இதில் மேகி மற்றும் ஐடிசி நிறுவனத்தின் யிப்பி, நேபாளத்தைச் சேர்ந்த சவுத்ரி குழும Wai Wai நூடுல்ஸ் மற்றும் பதஞ்சலி நூடுல்ஸ் ஆகியவை சந்தைகளில் புழங்கி வருகின்றன.