

நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் அதிகம் விற்பனையான பத்து மாடல் கார்களில், 6 மாருதி நிறுவனத்தைச் சேர்ந்தவை என்று இந்திய ஆட்டோமொபைல் சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்திருக்கிறது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையி லான காலத்தில் மாருதி நிறுவனத் தின் ஆல்டோ கார் அதிக எண் ணிக்கையில் விற்பனையாகி இருக் கிறது. இந்த காலத்தில் 1,20,720 கார்கள் விற்பனையாகியுள்ளன. இருந்தாலும், கடந்த வருடம் இதே காலத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை விட 7.9 சதவீதம் குறைவாகும்.
இரண்டாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் `வேகன்ஆர்’ இருக் கிறது. கடந்த ஆறு மாத காலத்தில் 86,939 கார்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் 84,660 வாகனங்கள் விற்பனையானது.
மூன்றாவது இடத்தில் டிசையர் உள்ளது. 81,926 கார்கள் விற்பனை யாகி இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் விற்பனையானதை விட 20.9 சதவீதம் குறைவாகும்.
ஸ்விப்ட் மாடல் கார் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த காலத்தில் 80,756 கார்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,06,911 கார்கள் விற்பனையானது.
ஐந்தாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மாடல் இருக்கிறது. 71,703 கார்கள் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரை யாண்டில் விற்பனையாகி உள்ளன. கடந்த வருடம் இதே காலத்தில் 58,078 கார்கள் விற்பனையானது.
ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் ஆறாவது இடத் தில் இருக்கிறது. 61,784 கார்கள் முதல் அரையாண்டில் விற்பனை யாகி இருக்கிறது. கடந்த வருடம் 66,037 கார்கள் விற்பனையானது.
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மாடல் கார் ஏழாவது இடத்தில் இருக்கிறது. 56,028 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த வருடம் 381 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.
மாருதி நிறுவனத்தின் பிரீமியம் ரக காரான பலேனோ 54,947 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த மாடல் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் விடாரா பிரிஸா உள்ளது. இந்த ரக கார் 50,859 விற்பனையாகி உள்ளது. பத்தாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெடா உள்ளது. இந்த ரக கார் 47,923 விற்பனையாகி இருக்கிறது.
உள்நாட்டு பயணிகள் கார் சந்தையில் 47.2 சதவீத சந்தையை மாருதி சுசூகி வைத்திருக்கிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 7,05,287 வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த காலத்தில் மொத்த பயணிகள் கார் விற்பனை 14,94,039 ஆக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்திலும் 47.29 சதவீத சந்தையை மாருதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.