

அசெஞ்ஜர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. ஜனவரி 2011-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.
அசெஞ்ஜர் நிறுவனத்தில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் முக்கிய தலைமை பொறுப்புகளில் பணியாற்றியவர்.
இதற்கு முன் நிதிச் சேவையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர். 2006-ம் ஆண்டில் நிறுவனத்தின் சர்வதேச தலைவர்கள் குழுவில் இணைந்தார்.
அசெஞ்ஜர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கான நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
லண்டனில் உள்ள இஎஸ்எஸ்இசி பிசினஸ் பள்ளியில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர்.
பிரான்ஸ் அரசு 2010-ம் ஆண்டு செவாலியே விருது வழங்கி கவுரவித்துள்ளது. பார்ச்சூன் 2015-ம் ஆண்டு டாப் சிஇஓ பட்டியலில் சிறந்த தலைவர் என பாராட்டு பெற்றவர்.
சர்வதேச பொருளாதார மையம், ஐரோப்பிய கூட்டுக்குழு, பிரான்ஸ் ஆலோசனைக் குழு, தி வால் ஸ்டீரிட் ஜர்னல் சிஇஓ குழு உள்ளிட்டவற்றிலும் செயல்பட்டு வருகிறார்.