Published : 22 Oct 2016 11:03 AM
Last Updated : 22 Oct 2016 11:03 AM

இவரைத் தெரியுமா?- ஜியா யூயெட்டிங்

மொபைல் போன், ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லீஎகோ (LeEco) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2004-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

கூல்பேட் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

பெய்ஜிங் எக்ஸ்பெல் கம்யூனிகேஷன் மற்றும் டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர்.

2002-ம் ஆண்டு சினோடெல் என்ற கம்பியில்லா தொடர்பு நிறுவனத்தை நிறுவியவர்.

சான்ஷி பிராந்திய வரி அலுவலகத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியவர்.

2016-ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட டெக்னாலஜி துறையில் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 45-வது இடத்தை பிடித்தவர்.

தற்போதைய நிலவரப்படி இவருடைய சொத்துமதிப்பு 4,500 கோடி டாலர்.

சீனாவில் உள்ள சான்ஷி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பை முடித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x