

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் கூட்டம் டெல்லியில் இன்று (செவ்வாய் கிழமை) தொடங்குகிறது. இந்தக் கூட்டம் மூன்று நாட்கள் நடை பெறும். இக்கூட்டத்தில் பொருள் களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிக்கலாம் என்பது முடிவு செய்யப்படும்.
ஜிஎஸ்டி விதிப்பு முறையில் ஒருமித்த கருத்து எட்டப்படுவதற் கான கடைசி தேதி நவம்பர் 22 என மத்திய நிதி அமைச்சகம் கெடு நிர்ணயித்துள்ளது. இத்தகைய சூழலில் கவுன்சில் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன் சில் கூட்டத்தில் இதன் உறுப்பினர் களாகிய அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்று பிராந்திய ரீதியில் பொருள்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவு செய்தனர்.
மூன்று நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் சேவை வரி செலுத்தும் 11 லட்சம் கணக்குகளை மத்திய அரசு தன் வசமே வைத்துக் கொள் வது தொடர்பாக முடிவு செய்யப் படும். கடந்த கூட்டத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடி வுக்கு இரண்டு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வரி செலுத்துவோரை மதிப்பீடு செய்யும் அதிகாரத்தை தாங்கள் இழக்கத் தயாராக இல்லை என தெரிவித்தன.
இந்நிலையில் இந்த விஷயத்தில் இரு மாநிலங்களையும் சமா தானப்படுத்தி ஒருமித்த கருத்து எட்ட மத்திய நிதி அமைச்சகம் முயலும். அப்போது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ஆகியவற்றுக்கான சட்டங்களை எதிர்வரும் குளிர் கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய வேண்டும். இக்கூட்டத் தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது.
இந்த வரி விதிப்பு முறையால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கு 3 முதல் 4 யோசனைகள் கூறப்பட்டன. இதில் ஏதேனும் ஒரு வழிமுறை இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.