

மும்பை: இந்தியாவுக்கு நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை கிடைத்துள்ள தங்கப் பதக்கங்களை வைத்து பொன்னான புதுமொழி தத்துவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவரது வழக்கம். அதோடு நின்று விடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார்.
திங்கள்கிழமை தோறும் மண்டே மோட்டிவேஷனல் மேற்கோள்களை பகிர்ந்து வருகிறார். அது பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறது. இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள இன்றைய மண்டே மோட்டிவேஷனல் Quote-ல் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இந்தியர்களை மையமாக வைத்து பகிர்ந்துள்ளார்.
“மூன்று விளையாட்டு வீரர்கள் நமக்கு ஒன்றில் வழிகாட்டி உள்ளார்கள். நாம் சுமக்கும் எடையை தங்கமாக மாற்றும் வித்தைதான் அது. மீராபாய் சானு, ஜெரமி லால்ரினுங்கா மற்றும் அச்சிந்தா ஷூலி. இதைவிட மண்டே மோட்டிவேஷனல் Quote-க்கு சிறந்த ஒன்றை நாம் வேறு எங்கும் தேடி பார்க்க வேண்டியதில்லை” என தெரிவித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.