Published : 01 Aug 2022 04:45 AM
Last Updated : 01 Aug 2022 04:45 AM
புதுடெல்லி: 2021-22 நிதி ஆண்டுக்கான வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிந்தது. இனி தாக்கல் செய்யவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவேண்டும். 2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல்செய்வதற்கு ஜூலை 31 வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது.
கடந்த இரு ஆண்டுகளாக வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சென்ற ஆண்டில்டிசம்பர் 31 வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனால், இந்தமுறையும் அவகாசம் நீட்டிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். கால அவகாசத்தை நீட்டிக்கும்படி பலரும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துவந்தனர். #Extend_ Due_ Date_ Immediately என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. ஆனால், மத்திய அரசு காலஅவகாசத்தை நீட்டிக்க மறுத்துவிட்டது.
நேற்றைய தினத்துக்குள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாதவர்கள், இனி தாக்கல் செய்ய அபராதம் கட்ட வேண்டும். அவர்கள் டிசம்பர் 31-க்குள் அபராதத்துடன் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்து கொள்ள லாம். ரூ.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம் உடையவர்கள் ரூ.1,000 அபராதமும் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்கள் ரூ.5,000 அபராதமும் கட்ட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT