Published : 31 Jul 2022 04:30 AM
Last Updated : 31 Jul 2022 04:30 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு

சென்னை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,815- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38,520 -க்குவிற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,736-க்கு விற்பனையானது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70-க்குவிற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.63,700 ஆக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x