

ஏற்றுமதி பிரச்சினைகளை கண் டறிந்து களைவதற்கு உண்டான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய வர்த் தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லாஜிஸ்டிக்ஸ் கட்டணம் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்ட ஏற்றுமதி யாளர்களுக்கு உரிய பிரச்சினை களை களைந்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக அவர் கூறினார்.
தொழில்துறை அமைப்பான அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் `ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதற்கான உத்திகள்’ என்ற தலைப்பில் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஏற்றுமதியாளர் களுக்கு லாஜிஸ்டிக்ஸ் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கட்டண போட்டியால் ஒரு நல்ல ஏற்றுமதியாளரை உருவாக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. பிரதமர் ஏற்றுமதியை ஊக்குவிக்க என்னசெய்ய வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்.
நாங்கள் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்து விவாதங்களை நடத்தி வருகிறோம். சாலைகளிலோ அல்லது நீர்வழியாகவே நடை பெறும் ஏற்றுமதிகளுக்கு உரிய லாஜிஸ்டிக்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே மத்திய அரசுக்கு பிரதானமாக உள்ளது. தவிர புதிய நீர் வழிப்பாதைகளை கண்டறிவதும் சவாலாக இருக்கிறது. கட்டண குறைப்புக்காக ரயில்வே அமைச்சகத்திடமும் பேசி வருகிறோம் என்று கூறினார்.