Published : 30 Jul 2022 04:10 PM
Last Updated : 30 Jul 2022 04:10 PM

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் ஆனார் சாவித்ரி ஜிண்டால்

சாவித்ரி ஜிண்டால்

மும்பை: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் சாவித்ரி ஜிண்டால். ப்ளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்து இந்தப் பெருமையை அவர் வசப்படுத்தியுள்ளார். முன்னதாக, இந்த இடத்தை சீனாவின் யாங் ஹூயான் அலங்கரித்து வந்தார். அவர் சொத்துப் பிரச்சினையில் சிக்கியதால் அவருடைய முதலிடம் பறிபோனது. இந்நிலையில், சாவித்ரி ஜிண்டால் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியல் வெளியானது. இதில், சாவித்ரி ஜிண்டால் முதலிடம் பிடித்தார். உலோகம், மின் துறையில் உள்ள ஜிண்டால் குழுமத்தின் உரிமையாளர், நிறுவனரின் மனைவி என்ற வகையில் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலர் என்றளவில் உள்ளது. இவரைத் தொடர்ந்து சீனாவின் ஃபேன் ஹாங்வே இரண்டாவது இடத்திலும், யாங் ஹூயன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு யாங் ஹூயன் தனது தந்தையின் சொத்திலிருந்து பெரும் பங்கை பெற்றார். இதனால் ரியல் எஸ்டேட் ஜாம்பவானின் மகளான யாங் ஹூயன் ஆசியாவின் பெரும் பணக்காரப் பெண் மற்றும் மிக இளம் வயதில் பில்லினர் ஆனவர் போன்ற பெருமைகளைப் பெற்றார். தற்போது சாவித்ரி ஜிண்டால் ஆசிய முதல் பெண் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

72 வயதாகும் ஜிண்டால், அவரது கணவர் ஓ.பி.ஜிண்டால் மறைவுக்குப் பின்னர் ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருக்கிறார். ஓ.பி.ஜிண்டால் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏப்ரல் 2020-ல் இந்தியாவின் ஜிண்டால் நிறுவன லாபம் 3.2 பில்லியன் டாலர் என்றளவுக்கு சரிந்து அண்மையில் ஏப்ரல் 2022-ல் 15.6 டாலர் என்றளவில் உயர்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x