

சென்னை: உலகளாவிய சமூக-பொருளாதார குழப்பம் இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மையால், அதுகுறித்து முதலீட்டாளர்கள் கவலைப்படுகிறார்கள். சர்வதேச வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் தங்கள் பணவியல் கொள்கைகளை மறுசீரமைத்து வருகின்றன.
ஆனால் குவான்டம் அசட் மேனேஜ்மென்ட் நிறுவன முதலீட்டு வல்லுநர்கள், நாட்டின் நீண்டகால வளர்ச்சிக் கதை மாறவில்லை என்று குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து விளக்கும் வகையில் குவான்டம் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் லாபத்துக்கான பாதை கருத்தரங்கம் 'பங்குச் சந்தை வளர்ச்சிக்கு தயாராக உள்ளது - இது உங்கள் போர்ட்ஃபோலியோவா?' என்ற தலைப்பில் சென்னை எழும்பூரில் உள்ள ஃபோர்டெல் ஓட்டலில் இன்று மாலை 5:30 முதல் 7:30 மணி வரை நடைபெறவுள்ளது.
முதலீட்டு வல்லுநர்களான ஜார்ஜ் தாமஸ், நிலேஷ் ஷெட்டி ஆகியோர் பங்கேற்று, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான காரணிகள் என்ன? உயர் பணவீக்கம் குறித்து இந்திய முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டுமா? சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வசதியான முதலீட்டு விருப்பங்கள் யாவை? ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் விளக்கவுள்ளனர்.