

மும்பை: பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் ஏற்றம் காணப்பட்து. மும்பை பங்குச் சந்தையில் 1,041 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 58,858 புள்ளிகளைத் தொட்டது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 288 புள்ளிகள் அதிகரித்ததில் குறியீட்டெண் 16,930ல் நிலை பெற்றது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் போக்கு அதிகம் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாக ரூ. 7,065.50 என்ற விலையில் வர்த்தகமானது.
நிறுவனத்தின் காலாண்டு முடிவு வெளியிடப்பட்டது. இதில் நிறுவனத்தின் லாபம் இருமடங்கு (ரூ. 2,596 கோடி) உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டதால் நிறுவன பங்கு விலை உயர்ந்தது.