சர்வதேச போட்டித்திறன் குறியீடு: இந்தியாவுக்கு 39-வது இடம்

சர்வதேச போட்டித்திறன் குறியீடு:  இந்தியாவுக்கு 39-வது இடம்
Updated on
1 min read

2016-17ம் ஆண்டு சர்வதேச போட் டித்திறன் குறியீடு பட்டியலை உலக பொருளாதார மையம் வெளி யிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 39-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 122-வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளிலேயே பாகிஸ்தான் கடைசி இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக பொருளாதார மையம் ஆண்டுதோறும் சர்வதேச போட் டித்திறன் குறியீடு அறிக்கையை 2005-ம் ஆண்டிலிருந்து வெளி யிட்டு வருகிறது. மேலும் இதனடிப்படையில் நாடுகளையும் பட்டியலிடுகிறது. தற்போது 2016-17-ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 71-வது இடத்திலும், பூட்டான் 97-வது இடத்திலும், நேபாளம் 98-வது இடத்திலும், வங்கதேசம் 106-வது இடத்திலும் உள்ளன.

சில அமைப்புகள், கொள்கைகள், காரணிகள் ஆகியவை நாட்டின் உற்பத்தி திறனுக்கு எவ்வளவு பங்களிப்பு செய்கிறது என்பதே சர்வதேச போட்டித்திறன் குறியீடு. மொத்தம் 12 காரணிகள் அடிப்படையில் சர்வதேச போட்டித்திறன் குறியீட்டுக்கான மதிப்பெண்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்படுகின்றன. அதாவது உள்கட்டமைப்பு, பேரியல் பொருளாதார சூழ்நிலை, சுகாதாரம், ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி மற்றும் பயிற்சி, சரக்கு சந்தை திறன், நிதிச் சந்தை வளர்ச்சி, சந்தை மதிப்பு மற்றும் கண்டுபிடிப்பு உள்ளிட்ட 12 காரணிகளை வைத்து ஒவ்வொரு நாட்டுக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

அமைப்புகள் காரணியை பொறுத்தவரை பாகிஸ்தான் இந்த வருடம் 111-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 119-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பு பொறுத்தவரை இந்த வருடம் 116-வது இடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in