பங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு தத்தாத்ரேயா தகவல்

பங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு தத்தாத்ரேயா தகவல்
Updated on
1 min read

பங்குச்சந்தை திட்டங்களில் (இடிஎப்) முதலீடு செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வரம்பை 10 சத வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இபிஎப் நிதி ரூ.13,000 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தை களில் இடிஎப் திட்டங்கள் மூலமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இபிஎப் நிதியிலிருந்து 5 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) பரிசீலித்து வந்தது. தற்போது 2016-17-ம் நிதியாண்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வரம்பை 10 சதவீதமாக இபிஎப்ஓ உயர்த்தி யுள்ளது.

``இபிஎப்ஓ நிதியை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யும் வரம்பை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவதற்கு நாங்கள் ஏற்கெனவே அறிவிக்கை வெளியிட்டுவிட்டோம்’’ என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

இந்த நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் ரூ.1,500 கோடி இடிஎப் திட்டங்களில் இபிஎப்ஓ முதலீடு செய்துள்ளது. தற்போது மீதமுள்ள 6 மாதங்களில் ரூ.11,500 கோடி முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

தொழிலாளர் நல அமைச்சகம் இபிஎப்ஓ அமைப்பின் அறங் காவலர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறதா? என்று செய்தி யாளர்கள் கேட்டபோது, இது குறித்து இருமுறை அறங்காவலர் குழு கூட்டத்தில் பேசிவிட்டோம். சில உறுப்பினர்கள் இடிஎப் திட்டங் களில் முதலீடு செய்வதற்கு எதிராக உள்ளனர் என்று பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

அறங்காவலர் குழுவின் ஒப்பு தல் தேவையில்லையா? என்று கேட்டதற்கு, மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டது. மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று தொழிலாளர் நலத்துறை செய லாளர் ஷங்கர் அகர்வால் தெரிவித்தார்.

தொழிலாளர் நலத்துறை எடுத் துள்ள இந்த முடிவை தொழிற் சங்கங்கள் கடுமையாக சாடியுள் ளன. அறங்காவலர் குழு ஒப்புதல் இல்லாமல் ஒருதலைபட்சமான முடிவை தொழிலாளர் நல அமைச் சகம் எடுத்துள்ளதாக தொழிற்சங் கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in