Published : 29 Sep 2016 10:31 AM
Last Updated : 29 Sep 2016 10:31 AM

பிளிப்கார்ட்-ல் முதலீடு செய்ய வால்மார்ட் திட்டம்?

இந்தியாவின் முன்னணி இ-டெய்ல் நிறுவனமான பிளிப் கார்ட் நிறுவனத்தில் 100 கோடி டாலர் முதலீடு செய்ய வால் மார்ட் நிறுவனம் திட்டமிட்டிருப்ப தாகத் தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை என்றாலும் இரு நிறுவ னங்களும் பேச்சு வார்த்தை நடத்து வதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இந்த நிறுவனத்தில் வால்மார்ட் முதலீடு செய்யும் பட்சத்தில் சிறிதளவு பங்குகள் வால்மார்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்படும். இது குறித்த பேச்சு வார்த்தையை இரு நிறுவனங்களும் நடத்தி வருகின்றன. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,600 கோடி டாலர்கள் ஆகும்.

இந்த இணைப்பு நடைபெறும்பட்சத்தில் இரு நிறுவனங்களும் இதனால் பயனடையும். பிளிப்கார்ட் நிறுவனம் உள்நாட்டில் நிதி திரட்ட சிரமப்பட்டு வரும் சூழலில் இந்த நிதி பிளிப்கார்ட்டுக்கு உதவியாக இருக்கும். அதேபோல வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது பலத்தை மேலும் உயர்த்திகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

இது குறித்து கருத்து கூற பிளிப் கார்ட் மற்றும் வால்மார்ட் ஆகிய இரு நிறுவனங்களும் மறுத்துவிட் டன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு பிறகு மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாக இந்தியா இருக்கிறது. அதன் காரணமாக அமேசான் உள்ளிட்ட நிறுவனங் கள் இந்தியாவில் களம் இறங்கி யுள்ளன. முன்னதாக பார்தி ஏர் டெல் நிறுவனத்துடன் இணைந்தது வால்மார்ட். ஆனால் அந்த இணைப்பு பெரிய வெற்றி அடைய வில்லை. அதனால் தனது பங்கினை வால்மார்ட் விற்றுவிட்டது.

கடந்த ஜூன் மாதம் சீனாவின் இரண்டாவது பெரிய இ-டெய்ல் நிறுவனமான ஜேடி டாட் காம் நிறுவ னத்தில் 5 சதவீத பங்குகளை வால் மார்ட் வாங்கியது குறிப்பிடத் தக்கது. அமேசான் நிறுவனம் இந்தி யாவில் 500 கோடி டாலர் முதலீடு செய்ய முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நான்கு வருடங்களுக்கு இ-டெய்ல் வளர்ச்சி 45 சதவீதம் அளவுக்கு இருக்கும் என கோடக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் 2,800 கோடி டாலர் மதிப்பில் இந்த துறை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x