Published : 30 Sep 2016 10:32 AM
Last Updated : 30 Sep 2016 10:32 AM

இவரைத் தெரியுமோ?- பிரபாத் அவஸ்தி

நிதிச் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான நொமுரா பைனான்சியல் நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவின் நிர்வாக இயக்குநர். 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2007-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

1999-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

1994-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை கிரிசில் அமைப்பின் ரேட்டிங் அனலிஸ்ட் பொறுப்பில் இருந்தவர்.

பார்க்லேஸ் கேபிடல் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுக்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பயிற்சி அதிகாரியாக தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையைத் தொடங்கினார்.

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இன்ஜினீயரிங் பட்டமும் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x