

உலகின் 8 பணக்கார நாடுகளில் மிகக் குறைந்த அளவே பெண் பணக்காரர்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. `லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ்’ இந்த ஆய்வை நடத்தியுள்ளது. மேலும் அதிக சம்பளம் பெறும் பிரிவில் மிகப் பெரிய பாலின இடைவெளி இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்பெயின், டென்மார்க், இத்தாலி, கனடா, நியூசிலாந்து, பிரிட் டன், ஆஸ்திரேலியா, நார்வே ஆகிய 8 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நாடு களில் உள்ள வரி தகவலை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் உள்ள பத்து சதவீத பெரும் பணக்காரர்களில் பெண்களின் பங்களிப்பு 3 சதவீதத் திற்கும் குறைவாகவே உள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியர் அலஸ்சாண்ட்ரா கேசாரி கோ இதுபற்றி கூறுகை யில், அனைத்து பெண்களும் வேலைக்குச் சென்றாலும் சிலர் மட்டுமே வருமான ரீதியில் உச்சத்திற்கு செல்கின்றனர். அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் பெண்கள் வரத் தொடங்கியிருந்தாலும், அவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்று கூறினார்.