

சீன மொபைல் தயாரிப்பு நிறுவன மான ஆப்போ விற்பனையில் ஆப் பிள் நிறுவனத்தை முந்தியுள்ளது. கடந்த மாத நிலவரப்படி இந்தியாவில் மொபைல் விற்பனை மதிப்பில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வை ஜெர்மனியைச் சேர்ந்த சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஜிஎப்கே நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி முதலிடத்தை சாம்சங் நிறுவனம் பிடித்துள்ளது. ஆப்போ நிறுவனம் கடந்த மாதத்தில் 16 சதவீத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
``இந்தியா எங்களுக்கு மிக முன்னுரிமையான சந்தை. மேலும் நாங்கள் வாடிக்கையாளர் எதை விரும்புகிறார்கள் என்பதை கண்டறிந்துகொண்டோம். உதா ரணமாக வாடிக்கையாளர்கள் போட்டோ, செல்பி போன்றவற்றை எடுக்க விரும்புகின்றனர். ஆகவே வாடிக்கையாளருக்கு நல்ல அனுபவத்தைத் தருவதற்காக போட்டோகிராபி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்” என்று ஆப்போ நிறுவனத்தின் சர்வதேச துணைத்தலைவர் மற்றும் ஆப்போ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஸ்கை லீ தெரிவித்தார்.
கடந்த மாதம் ஆப்போ நிறுவனம் `செல்பி எக்ஸ்பெர்ட் ஆப்போ எப்1எஸ்’ என்ற மொபைலை அறிமுகம் செய்தது. இந்த மொபைலில் 16 எம்பி திறன் கொண்ட முன்பக்க கேமரா வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.