

தினசரி 10 லட்சம் நபர்களுக்கு ரயில் பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்படு வதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ரயில் யாத்ரா டாட் இன் என்கிற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தொலைதூர ரயில் பயணங்களுக்கான தேவைக்கும் - அளிப்புக்குமான விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட ரயிலுக்கான முன்பதிவு செய்து, இருக்கை வசதி கிடைக்கும் என்று பலர் காத்திருக்கின்றனர். ஆனால் இருக்கை வசதியின் எண்ணிக்கையோ காத்திருப்பு எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் இல்லை.
2016-ம் ஆண்டில் ஜனவரி மாதத்திலிருந்து இந்தியாவில் உள்ள ரயில் டிக்கெட் புக்கிங் முகவர்களின் தகவல்களை ஆய்வு செய்த வகையில் ரயில் யாத்ரா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி நாடு முழு வதும் தினசரி சுமார் 10 முதல் 12 லட்சம் பயணிகள் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படாததால் பய ணம் செய்ய முடியாமல் உள்ள னர்.
இது தொடர்பாக இந்த தளத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரி யுமான மணீஷ் ரதி கூறும்போது ``தேவையின் அளவு அதிகரித்துள்ளதை இந்த ஆய் வின் மூலம் தெரிந்து கொண்டோம் என்றும், தினசரி நூற்றுக்கும் மேற் பட்ட கூடுதல் ரயில்கள் தேவையாக உள்ளது. அதே சமயத்தில் ஏற்கெனவே நெருக்கடியாக ரயில் சேவை இருந்து வரும் சூழலில், எதிர் காலத்தில் அதிக எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுவதற்காக வாய்ப்புகள் குறைவு என குறிப்பிட்டார்.