Published : 11 May 2016 09:32 AM
Last Updated : 11 May 2016 09:32 AM

டாடா ஸ்டீல் இங்கிலாந்து ஆலையை வாங்க ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆர்வம்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இங்கிலாந்து ஆலையை கையகப் படுத்த சஜன் ஜிண்டாலின் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. இங் கிலாந்தில் நஷ்டத்தில் இயங்கும் உருக்கு தொழிலிலிருந்து வெளி யேற டாடா ஸ்டீல் முடிவெடுத்தது. இந்த நிலையில் டாடா ஸ்டீலின் இங்கிலாந்து ஆலையை வாங்க ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து ஆலையை விற் பனை செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏழு கார ணங்களை டாடா ஸ்டீல் முன் வைத்தது. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் டாடா ஸ்டீல் இங்கி லாந்து ஆலையை கையகப்படுத் தும் விருப்பத்தை வெளிப் படுத்தியுள்ளது. இதற்காக டாடா தரப்பு பதிலுக்காக காத்திருக்கிறது என்று இது குறித்து தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன தரப்பிலிருந்து உடனடி யாக கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை.

டாடா ஸ்டீல் இங்கிலாந்து நிறுவனத்தின் சொத்துக்களில் தெற்கு வேல்ஸில் உள்ள போர்ட் டால்பாட் ஆலையும் அடங்கும். இது இங்கிலாந்தில் 4,000 தொழிலாளர்கள் பணியாற்றும் மிகப்பெரிய ஆலையாகும். நியூ போர்ட் ஆலையில் 1,300 பணி யாளர்களும் ரோதர்ஹாம் ஆலை யில் 1,200 பணியாளர்களும் உள்ள னர். 11 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஸ்டீல் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் ஆலைகள் உள்ளன. ஆண்டுக்கு 18 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x