

வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று, வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி, 25,579.72 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 7600 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. முதன்முறையாக நிப்டி 7,600 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததாலும் இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுகின்றன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்துள்ளது.