

புதுடெல்லி: கடந்த மாதம் நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எல்இடி விளக்குகள், கிரைண்டர், மருத்துவமனை அறை வாடகை உட்பட பல பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி உயர்த்தப் பட்டது. இந்த வரி மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
எல்இடி விளக்குகள், மின் விளக்குகள் தொடர்பான உதிரி பாகங்கள், பிரின்டிங் மை, பேனா மை, கத்தி, பிளேடு, மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந் திரங்கள் ஆகியவற்றின் மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கிரைண்டர், சூரிய ஆற்றலில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட தோல் மற்றும் காலணி தயாரிப்பு தொடர்பான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
வணிக பெயரில் அல்லாத பாக் கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுபொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. மின்னணு கழிவுகளுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ரூ.1,000-க்கும் குறைவான அறை வாடகைக்கு 12 சதவீதமும்ரூ.5,000-க்கு மேலான மருத்துவமனை அறை வாடகைக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. சாலை, ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடுதொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்குஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
உணவுப் பொருட்களை பேக் செய்யபயன்படுத்தப்படும் டெட்ரா பேக் மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வாடகை லாரிகள், சரக்கு வண்டிகள் தொடர்பான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக் கப்பட்டது. இன்று முதல் இந்த வரி மாற்றங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருகின்றன.