தொழில் தொடங்குவதை எளிதாக்க சட்ட ரீதியான அளவியல் விதிமுறைகள் 2011-ல் திருத்தம்: மத்திய அரசு நடவடிக்கை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், மின்னணு தொழிற்சாலைகளின் சுமையைக் குறைக்கவும், சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறைகள் 2011-ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் செய்திக்குறிப்பு: மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) (இரண்டாவது சட்டத்திருத்தம்) விதிமுறைகள் 2022 வாயிலாக, மின்னணு சாதனங்கள் அடைக்கப்பட்ட பேக்கேஜில் குறிப்பிடாத சில கட்டாய விவரங்களை, 'க்யூஆர்' கோட் மூலம் வெளியிடுவதை அனுமதிக்கிறது.

இந்த சட்டத்திருத்தம், விரிவான விவரங்களை தொழில் நிறுவனங்கள் 'க்யூஆர் கோட்' வாயிலாக வெளியிடுவதை அனுமதிக்கிறது. மேலும் பேக்கேஜின் மேல்பகுதியில், முக்கிய விவரங்களை தெளிவாக வெளியிடுவதை அனுமதிப்பதோடு, எஞ்சிய விவரங்களை 'க்யூஆர் கோட்' வாயிலாக நுகர்வோருக்குத் தெரிவிக்கவும் வகை செய்கிறது. இதனால் தயாரிப்பாளர், பேக்கிங் செய்வோர், இறக்குமதியாளரின் முகவரி, அந்தப் பொருளின் பொதுவான பெயர், அளவு, வடிவம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி நீங்கலான நுகர்வோர் சேவை விவரங்களையும் 'க்யூஆர் கோட்' மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு முன்புவரை, மின்னணு சாதனங்கள் உட்பட, பேக்கிங் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களிலும், சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறை 2011-ன் படி, பேக்கிங் மீது சில விவரங்களை வெளியிடுவது கட்டாயமாக இருந்து வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in