எல்ஐசி சொத்து மதிப்பு ரூ.5.41 லட்சம் கோடி

எல்ஐசி சொத்து மதிப்பு ரூ.5.41 லட்சம் கோடி
Updated on
1 min read

சென்னை: எல்ஐசி-யின் சொத்து மதிப்பு ரூ.5.41 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து கணக்கீடு செய்வதற்கு மெசர்ஸ் மில்லிமன் அட்வைசர்ஸ் எல்எல்பி என்றநிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்நிறுவனம் 2022 மார்ச் 31 நிலவரப்படி எல்ஐசி நிறுவன சொத்துகளை மதிப்பீடு செய்தது.

அதன் அடிப்படையில் நிறுவனத்தின் எம்பெடட் வேல்யூ விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு எல்ஐசியின் இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) மற்றும் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பை உள்ளடக்கியது எம்பெடட் வேல்யூ எனப்படுகிறது. 2021-ம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி எல்ஐசியின் எம்பெடட் மதிப்பு ரூ.95.61 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சில நிதிகளை பிரித்ததன் மூலமாகவும், புதிய வர்த்தகத் திட்டங்களின் மதிப்பு உயர்ந்ததன் காரணமாகவும் இதன் சொத்து மதிப்பு 2022-ம் ஆண்டில் மிகவும் அதிகரித்துள்ளதாக கணக்கீட்டு நிறுவனம் மில்லிமேன் தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in