ஜூலை 31-ம் தேதி கடைசி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தயாரா? - தேவையான ஆவணங்கள் என்னென்ன?

ஜூலை 31-ம் தேதி கடைசி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தயாரா? - தேவையான ஆவணங்கள் என்னென்ன?
Updated on
2 min read

2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக ஐ.டி.ஆர் ஐடிஆர் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்படும். இந்த ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையான முக்கிய சில ஆவணங்கள் தேவைப்படுகிறது.

சம்பளம் பெறும் நபர்களுக்கு ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கு படிவம் 16 முக்கிய ஆவணமாகும். ஒரு நிறுவத்தால் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த ஆவணம், வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட அனைத்து சம்பள ஊழியர்களுக்கும் படிவம் 16 வழங்குவதற்கு நிறுவனமேள பொறுப்பாகும். இந்த படிவத்தில் மூல (டி.டி.எஸ்) சான்றிதழில் கழிக்கப்படும் வரி குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

பகுதி ஏ மற்றும் பகுதி பி என இரண்டு பகுதிகளை கொண்ட படிவம் 16 –ல் பகுதி ஏ என்பது நிதியாண்டில் முதலாளியால் கழிக்கப்படும் வருமான வரியைக் குறிப்பதாகும். அதில் பணியாளரின் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரங்கள் மற்றும் முதலாளியின் வரி விலக்கு கணக்கு எண் டேன் ஆகியவை உள்ளன. பகுதி பி-ல் ஊழியரின் மொத்த சம்பளத்தில் பிடித்தம் போக மீதி சம்பளம் பற்றிய தகவல் இருக்கும்.

வட்டி வருமான சான்றிதழ்

சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைத் தவிர, ஒரு நபர் பல்வேறு வட்டி முதலீடுகளான வங்கி மற்றும் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைப்பு மற்றும் வைப்புத் தொகை போன்றவற்றிலிருந்து வருமானத்தைப் பெறுகிறார். இந்த நிதி நிறுவனங்கள் தங்கள் வைப்புத்தொகையாளர்களுக்கு வட்டி சான்றிதழ்கள் / வங்கி அறிக்கைகளை வழங்குகின்றன. இந்த வருமான வரிச் சட்டம் 80 டி.டி.ஏ இன் கீழ் ஒரு வங்கி / தபால் அலுவலகத்தில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கிலிருந்து சம்பாதித்த வட்டிக்கு ரூ .10,000 வரை வரி விலக்கு கோரலாம்.

வரி சேமிப்புக்கான சான்று

முந்தைய நிதியாண்டில் குறிப்பிட்ட காலப்பகுதியில் தங்கள் வரி சேமிப்பு முதலீட்டு சான்றுகளை தங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்காத ஊழியர்கள் இப்போது வரி விலக்குகளை கோருவதற்கான ஆதாரத்தை நேரடியாக ஐ-டி துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான இதர சான்று:

ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்தப்பட்ட ரசீது

மருத்துவ காப்பீட்டு ரசீது

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) பாஸ்புக்

5 ஆண்டு எப்டி ரசீதுகள்

மியூச்சுவல் பண்ட் முதலீடு

வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் சான்றிதழ்,

நன்கொடை செலுத்தப்பட்ட ரசீது

கல்வி கட்டணம் செலுத்திய ரசீது

மேலே கூறப்பட்டுள்ள ஆவணங்களை பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in