

சென்னை: கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி உடன் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் பிளான் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் டெலிகாம் சேவையை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல். இந்நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிமுகம் செய்வது வழக்கம். சமயங்களில் அது அந்த நிறுவனத்துக்கு லாபம் கொடுக்கும் வகையிலும் இருக்கும்.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் பிளானில் இப்போது மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை அடுத்து இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சாதகமானதாகவும் உள்ளது. முன்னதாக ரூ.265 திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை பெற்று வந்தனர்.
இப்போது அதில் தான் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி ரூ.265 திட்டத்தின் கீழ் பயனர்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 குறுஞ்செய்திகள் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை கொண்டுள்ளது. அதாவது இந்த பிளான் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டாவை பெறலாம்.