

ரெப்கோ வங்கி கடந்த நிதி ஆண்டில் ரூ.117 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.109 கோடியாகும்.
வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.13 ஆயிரம் கோடியைக் கடந்து ரூ.13,008 கோடியாக இருந்தது. சேமிப்பு ரூ.7,760 கோடியாகவும் வழங்கிய கடன் அளவு ரூ.5,248 கோடியாகவும் இருந்தது. சேமிப்பு மற்றும் கடன் வழங்குவதில் வங்கி 7 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
வங்கியின் வருமானம் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,010 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக் கடன் 3.42 சதவீதமாகவும் நிகர வாராக் கடன் பூஜ்யமாகவும் இருந்தது.
-----------------------------------------
யூகோ வங்கி நஷ்டம் ரூ.1,715 கோடி
பொதுத்துறை வங்கியான யூகோ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர நஷ்டம் 1,715 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 209 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் ரூ.5,263 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.4,745 கோடியாக சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் கடுமையாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6.76 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 15.43 சதவீதமாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 2,799 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.