

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு மத்திய அரசு குறைந்த விலையிலான வீடுகளை கட்டிக் கொடுக்க பரீசீலித்து வருவதாக கூறியுள் ளது. தொழிலாளர் ஓய்வூதிய ஆணையத்தில் உள்ள 5 கோடிக் கும் அதிகமான சந்தாதாரர்க ளுக்கு குறைந்த விலையிலான வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக நேற்று நாடாளுமன்றதில் எழுத்து பூர்வமான பதிலில் தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா குறிப்பிட்டார்.
அரசு இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், திட்டம் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் அளவில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி நடந்த இபிஎப்ஓ அறங்காவலர் கூட்டத்தின் பட்டியலில் இது குறித்த முன் வரைவு பேசப்பட்டுள்ளது. குறிப் பாக குறைந்த விலை வீடுகள் திட்டத்தில் சந்தாதாரர்களின் எதிர்கால பிஎப் பங்களிப்பை இணைத்துக் கொள்ள உறுப் பினர்களின் உறுதிமொழியை வாங்குவது குறித்து பேசப்பட்டது.
சந்தாதாரர்களுக்கு வீட்டு வசதி குறித்த வல்லுநர்களின் அறிக்கையும் அறங்காவலர் கூட் டத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அறங்காவல் குழு ஒருமனதாக பரிந்துரைக்கும் பட்சத்தில் சந்தாதாரர்களது பிஎப் நிதியிலிருந்து முன்பணமும், மாதாந்திர தவணை தொகைக்கு எதிர்கால பிஎப் பணத்தை இணைத்துக்கொள்வதும் இந்த திட்டத்தின் மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் முன்வரை வில் சந்தாதாரருடன் வங்கிகள் / வீடு கட்டும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் மூன்று தரப்பும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
வீட்டு வசதி மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு அமைச்சக திட்டத்தின் கீழ் பயன்களையும் இந்த திட்டத்தின் கீழ் விரிவுப டுத்தப்படும். இருப்பினும் இந்த திட்டம் குறைந்த வருமான பிரிவி னர் மற்றும் சாதாரண பணியா ளர்கள் அல்லது இபிஎப்ஓ சந்தா தாரர்கள் தங்களது பணிகாலத்தில் வீடு வாங்கவில்லை என்றால் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரைத்துள்ளது.