

கூடுதலாக செலுத்தப்பட்ட ரூ.1.22 லட்சம் கோடியை வருமான வரித் துறை 2016 நிதியாண்டில் திரும்ப அளித்துள்ளது. வருமான வரித் துறை மொத்தம் 2.10 லட்சம் கோடி கணக்குகளுக்கு கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப அளித்துள்ளது.
2014-15 நிதியாண்டில் ரூ.1,12,188 கோடி திரும்ப அளிக்கப் பட்டுள்ளது. 2013-14 நிதியாண்டில் ரூ.89,664 கோடி அளவுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
2015-16 நிதியாண்டில் 94 சதவீத வருமான வரிதாக்கல் ஆன்லைன் மூலம் நடந்துள்ளது. 4.14 கோடி வரிமான வரித்தாக்கல் படிவங்களுக்கான செயல்பாடுகள் பெங்களூரு மையத்தில் மனித தலையீடு இல்லாமல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரி ஆணையம், மத்திய சுங்க மற்றும் கலால் வரி ஆணையம் போன்றவை கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை துரிதமாக மதிப்பிடுவது மற்றும் திரும்ப அளிப்பதற்கு ஏற்ப உகந்த தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
2015-16 நிதியாண்டில் இந்திய ஜிடிபியில் மறைமுக வரியின் பங்கு 5.17 சதவீதமாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 4.36 சதவீதமாக இருந்தது. 2016-17 நிதியாண்டில் இதை 5.20 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.