வணிகம்
கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை
புதுடெல்லி: கோதுமை மாவு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் குழு (ஐஎம்சி) பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்றுமதி வர்த்தக இயக்குநரக ஜெனரல் வெளியிட்ட அறிவிக்கையில் இந்த உத்தரவு இடம்பெற்றுள்ளது. இது ஜூலை 12-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாகும் கோதுமை மாவு ரகம் குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும் என டிஜிஎப்டி தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கோதுமை மாவுக்கு தடை விதிக்கப்படவில்லை. அதேபோல உப பொருள்களான மைதா, ரவை உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்படவில்லை.
