பேமென்ட் வங்கி திட்டத்தை கைவிட்டார் திலிப் சாங்வி

பேமென்ட் வங்கி திட்டத்தை கைவிட்டார் திலிப் சாங்வி
Updated on
1 min read

பேமென்ட் வங்கி தொடங்கும் திட்டத்தை கைவிடுவதாக டெலி நார் பைனான்ஸியல் சர்வீசஸ், ஐடிஎப்சி வங்கி மற்றும் திலீப் சாங்வி ஆகியோர் கூட்டாக அறிவித்திருக்கின்றனர். இருந்தாலும் என்ன காரணத்துக்காக கைவிட்ட னர் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11 நிறுவனங்கள் பேமென்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அளவிலான அனுமதியை வழங்கியது. ஏற்கெனவே சோழமண்டலம் டிஸ்ட்ரிபியூஷன் சர்வீசஸ் பெமென்ட் வங்கி தொடங்கும் உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் திருப்பி கொடுத்தது. இப்போது 9 நிறுவனங்களிடம் இந்த உரிமம் இருக்கிறது.

ஆதித்யா பிர்லா நூவோ, ஏர்டெல் எம் காமர்ஸ் சர் வீசஸ், இந்திய தபால்துறை, ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா, பேடிஎம் மற்றும் வோடபோன் எம்-பேசா ஆகிய நிறுவனங்களுக்கு பேமென்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கியின் அனுமதி இருக்கிறது. கடந்த எட்டு மாதங்களாக மூன்று கூட்டு உறுப்பினர்கள் இணைந்து பேமென்ட் வங் கியை தொடங்குவதற்கான பணியில் இருந்தோம். இப் போது இந்த திட்டத்தை கைவிடு வதாக மூவரும் சேர்ந்து முடி வெடுத்திருக்கிறோம் என்று அறிக் கையில் கூறப்பட்டிருக்கிறது.

சில நிறுவனங்கள் பேமென்ட் வங்கி சந்தை மதிப்பை கூடுத லாக கணித்திருந்தனர் என்று வல்லுநர்கள் தெரிவித்திருக் கின்றனர். நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஏர்டெல் பேமென்ட் பேங்க் தொடங் கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அதேபோல நடப்பு நிதி ஆண்டுக்குள் பேமென்ட் வங்கி தொடங்கப்படும் என்று ஆதித்யா பிர்லா நூவோ தெரிவித்திருக் கிறது. பேமென்ட் வங்கிகள் கடன் கொடுக்க முடியாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் ஒன்றாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in