Published : 29 May 2016 12:29 PM
Last Updated : 29 May 2016 12:29 PM

விப்ரோ சிஇஓ சம்பளம் ரூ.12.04 கோடி

விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபித் அலி நீமுச்வாலா கடந்த நிதி ஆண்டில் 12.04 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். இவருக்கு முன்பு சிஇஓ-வாக இருந்த டிகே குரியன் வாங்கியதை விட இவரது சம்பளம் அதிகம்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு தலைமைச் செயல்பாட்டு அதிகாரி யாக விப்ரோவில் இணைந்தார். முன்பு இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்தார். விப்ரோ பங்கின் தற்போதைய மதிப்பு 545.90 ரூபாய். இந்த மதிப்பு அடிப்படையில் 10.9 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் இவர் வசம் உள்ளன.

விப்ரோ நிறுவனத்தின் துணைத் தலைவர் கடந்த நிதி ஆண்டில் 14.07 கோடி ரூபாய் பெற்றார். முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த காலத்தில் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி ஆண்டுக்கு 2.1 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். (பங்குகள் மூலம் கிடைக்கும் வருமானம் அல்லாமல்). அவருடைய மகன் ரிஷாத் பிரேம்ஜியும் 2.1 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x