

சென்னை: எல்ஐசி நிறுவனத்தின் ‘எம்பெடட் வேல்யூ’ விவரங்கள் ஜூலை 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு (NAV) மற்றும் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பை உள்ளடக்கியது ‘எம்பெடட் வேல்யூ’ எனப்படுகிறது.
கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, எல்ஐசி நிறுவனத்தின் ‘எம்பெடட் வேல்யூ’வை மதிப்பிடும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
இப்பணிகள் முடிக்கப்பட்டு, உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டதும், ‘எம்பெடட் வேல்யூ’ தொடர்பான விவரங்களை எல்ஐசி வெளியிடும். தற்போதைய நிலையில், இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் அந்த விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. l