Published : 01 Jul 2022 06:42 AM
Last Updated : 01 Jul 2022 06:42 AM

தணிக்கை துறையின் சவால்கள் குறித்து மாநாடு - சென்னையில் நாளை நடைபெறுகிறது

சென்னை: தணிக்கைத் துறையில் உருவாகிவரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஒரு நாள் தேசிய மாநாடு சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நாளை நடைபெற உள்ளது. இம்மாநாட்டை இந்திய உள் தணிக்கையாளர்கள் அமைப்பின் (Institute of Internal Auditors India - IIA) மகளிர் பிரிவு நடத்துகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அனுபவமிக்க தணிக்கையாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளனர். இஎஸ்ஜி மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இஎஸ்ஜி என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகக் காரணிகள் நிறுவனத்தின் போக்கில் தாக்கம் செலுத்தக் கூடியவையாக உள்ளன. ஒரு நிறுவனத்தை மதிப்பீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் இஎஸ்ஜி காரணிகளையும் கருத்தில் கொள்கின்றனர்.

இந்நிலையில் இஎஸ்ஜி சார்ந்து சரியான திட்டங்களை உருவாக்குவதன் அவசியத்தையும் அதன்மூலம் ஒரு நிறுவனம் எவ்வகையில் பலன் பெற முடியும் என்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் டிஜிட்டல் மோசடி எவ்வளவு ஆபத்தானதாது என்பது குறித்தும், அத்தகைய மோசடிகளை அடையாளம் காண்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க பதிவுக் கட்டணம் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x