Published : 07 May 2016 10:12 AM
Last Updated : 07 May 2016 10:12 AM

மானிய சீரமைப்பு: அரசு பரிசீலனை- மக்களவையில் ஜெயந்த் சின்ஹா தகவல்

உணவு மானியம் மற்றும் உர மானியத்தை சீரமைப்பது குறித்து செலவு நிர்வாகக் குழு அளித்த பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இத்தக வலை மத்திய நிதித்துறை இணை யமைச்சர் ஜெயந்த் சின்ஹா மக்கள வையில் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியதாவது: 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் செலவு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பிரதான பணியே உணவு மற்றும் உரத்துக்கு அளிக்கப்படும் மானிய அளவைக் குறைத்து பற்றாக்குறை யைக் குறைக்க உரிய ஆலோசனை வழங்குவதுதான். இக்குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசு ஏற்கெனவே பயனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்குதல் (டிபிஎஸ்) திட்டத்தை செயல்படுத்தி, இதில் உள்ள முறைகேடுகளைத் தடுத்துள்ளது.

நிறுவன வாரியாக நலத்திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரைத் துள்ளது. இதைச் செயல்படுத் துவது குறித்தும் அரசு ஆராய்ந்து வருகிறது. ஏற்கெனவே செயல் படுத்திவரும் செலவுகளைக் கட்டுப் படுத்துவதற்கான பணிகளையும் அரசு எடுத்து வருவதாக அவர் கூறினார்.

பாசுமதியில் முறைகேடு

ஈரானுக்கு அனுப்புவதாகக் குறிப்பிட்டு பாசுமதி அரிசி துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட் டதை வருவாய்த்துறை அதிகாரி கள் சமீபத்தில் கண்டுபிடித்துள் ளனர் என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.

உயர் ரக பாசுமதி ஏற்றுமதியில் மிகப் பெரிய முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டதாக மற்றொரு கேள் விக்கு பதிலளிக்கையில் தெரிவித்த சின்ஹா, கடைசி நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்ட தாகக் குறிப்பிட்டார்.

ஈரானுக்கு அனுப்புவதாகக் குறிப்பிட்டால் அந்தத் தொகையை ரூபாயில் பெற முடியும். அவ்விதம் ஏற்றுமதி சலுகையைப் பெற்றுவிட்டு அதை துபாய்க்கு ஏற் றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்ட தாக அவர் கூறினார். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவ னங்கள் குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

அந்நிய நேரடி முதலீடு

இந்தியாவுக்கு கடந்த நிதி ஆண்டில் டிசம்பர் வரை(2015-16) வந்த அந்நிய நேரடி முதலீடு 4,082 கோடி டாலர் என்று சின்ஹா கூறினார். முந்தைய நிதி ஆண்டில் இது 4,429 கோடி டாலராக இருந்தது. 2010-11-ம் நிதி ஆண்டில் மட்டும் அந்நிய நேரடி முதலீடு 8 சதவீத அளவுக்குக் குறைந்திருந்ததாகக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x