Published : 18 Jun 2014 12:10 PM
Last Updated : 18 Jun 2014 12:10 PM

ஹெச்.ஆர்.கான் - இவரைத் தெரியுமா?

$ ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக 2011 ஜூலை முதல் செயல்பட்டு வருகிறார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஷியாமளா கோபிநாத் ஓய்வுக்கு பிறகு துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.

$ இதற்கு முன்பு ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக 2007-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார்.

$ 1978-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி பணியில் சேர்ந்தார். உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், டெல்லி இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

$ ரிசர்வ் வங்கியின் நியமன இயக்குநராக தேனா வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா ஆகிய வங்கிகளில் இருக்கிறார்.

$ அந்நிய செலாவணி துறை, உள்நாட்டு கடன் நிர்வாகம், வெளி முதலீடு மற்றும் செயல்பாடு உள்ளிட்ட சில துறைகள கவனித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x