

பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) 51 சதவீதம் அதிகரிப்பதன் மூலம், பாதுகாப்பு துறையில் உலகின் முக்கிய உற்பத்தி நாடாக இந்தியா திகழும் என்றும் இதன் மூலம் பாதுகாப்புக்காக இறக்குமதி செய்வது குறையும் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்சம் 51 சதவீதத்தை அனுமதிக்கும்போது வளர்ச்சிக்கு வழி வழிக்கும். வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும். உள்நாட்டு நிறுவனங்கள் இதை பயன்படுத்தும்போது சர்வதேச அளவில் பாதுகாப்பு துறையின் முக்கியமான நாடாக இந்தியா மாறுவதோடு ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புத் துறைக்கு தேவை யான உபகரணங்களை ஒவ்வொரு ஆண்டும் 800 கோடி டாலர் அளவுக்கு இந்தியா இறக்குமதி செய்கிறது. பாதுகாப்புக்காக அதிகளவு இறக்குமதி செய்வது இந்தியாதான். பாதுகாப்புத் துறை என்பது முக்கியமான துறை, அதனால் அந்நிய முதலீட்டுக்கான வரைவில் போதுமான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இருந்தாலும் அந்நிய நிறுவனங் களுக்கு நிர்வகிக்கும் அதிகாரம் (51%) கொடுக்கும் போது புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். தவிர உற்பத்தி இங்கேயே நடக்கும், ஏற்றுமதி அதிகரிக்கும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு, அமைச்சரங்களுக்கு இடையே பேசி வருகிறது.
சில தொழில் வர்த்தக அமைப்புகள் 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு போதும் என்று சொல்கிறது. சில அமைப்புகள் போதுமான அளவுக்கு நிறுவனத்தில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் சர்வதே முதலீட்டாளர் ஏன் இங்கு வர வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அடைவதற்கான வாய்ப்பை இந்தியா இழந்து விடக்கூடாது. அதனால் அந்நிய நேரடி முதலீடு 51 % கட்டாயம் இருக்க வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2001 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதமாக இருந்தது. (26% எஃப்.டி.ஐ. + 23% அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்- எஃப்.ஐ.ஐ.) அந்த காலத்தில் 50 லட்சம் டாலர்கள் மட்டுமே அந்நிய முதலீடு வந்தது. ஆனால் இந்த காலத்தில் இந்தியாவுக்கு வந்த மொத்த அந்நிய முதலீடு 32,000 கோடி டாலர்கள். மற்ற துறையை விட பாதுகாப்பு துறையில் முதலீடு மிக குறைவு.
அதனால் 49 சதவீத எஃப்.டி.ஐ. புதிய முதலீடுகளை கொண்டுவராது. ஒரு வேளை 49 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டால் எந்தவிதமான மாற்றங்களும் நிகழாது என்று அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.